தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

supreme court

By

Published : Nov 9, 2019, 11:48 AM IST

ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்திருந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

1. அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி.

2. ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அயோத்தி அறக்கட்டளை அமைக்க வேண்டும்.

3. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராம ஜென்ம பூமி அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள அயோத்தியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும்.

5. சர்ச்சைக்குரிய இடம் ராம்லல்லாவுக்கே சொந்தம்.

6. நிலத்திற்கு உரிமை கோரும் ராம் லல்லாவின் மனு மட்டுமே ஏற்கக்கூடியது.

7. சன்னி வக்பு வாரியத்திற்கு அவர்கள் ஏற்கும் வகையில் ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்.

8. சர்ச்சைக்குரிய நிலத்திற்கு சன்னி வக்பு வாரியம் முழு உரிமை கோர முடியாது.

9. 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதம்.

10. பாபர் மசூதி பாபர் ஆட்சியில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இறை நம்பிக்கைக்குள் செல்வது நீதிமன்றத்திற்கு தேவையற்றது எனக் கருதுகிறோம்.

11. பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு துல்லியமாக ஆதாரம் இல்லை.

12. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

13. இந்திய தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்கள் ஆராயப்பட்டன. 12ஆவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் இருந்ததாக இந்திய தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது.

14. 12, 16ஆம் நூற்றாண்டுக்கு இடையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பது குறித்த தெளிவான ஆதாரம் இல்லை.

15. அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் உயரிய நம்பிக்கை. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையை சந்தேகத்திற்கு உட்படுத்த முடியாது.

16 கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர் யார் என்பதை தீர்மானிக்க முடியாது.

17. மசூதிக்கு முற்றத்தில் இருந்ததாகக் கூறப்படும் கட்டடம் இஸ்லாமிய முறையிலான கட்டடம் இல்லை என்று தொல்லியல் துறை கூறுகிறது.

18. வரலாறு, மதம், சட்டம் என பலவற்றை கடந்து அயோத்தி வழக்கில் உண்மை பயணித்துள்ளது.

19. சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கும் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தியதற்கும் ஆதாரங்கள் உள்ளன.

20. கட்டுமானம் இருக்கிறது என்பதற்காக அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது.

21. சர்ச்சைக்குரிய நிலத்தின் மையப்பகுதியில் ராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

22. சர்ச்சைக்குரிய நிலப்பகுதியில் இந்துக்கள் வழிபாடு நடத்தியுள்ளனர். அதற்கு ஆதாரமும் உள்ளது.

இவ்வாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details