பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘பி.எம்.நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மோடி வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இத்திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியாக இருந்த சூழலில் தேர்தலை மனதில் வைத்துதான் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை உடனடியாக தடை செய்யவேண்டும் என காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
‘மோடி’யை பார்த்துவிட்டு முடிவு செய்யுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - மோடி
டெல்லி: ‘பி.எம் நரேந்திரமோடி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு அதனை தடை செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
modi
இதனையடுத்து, திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ’பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படத்தை பார்த்துவிட்டு தடை செய்யலாமா வேண்டாமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். ஆணையத்தின் கருத்தை சீலிடப்பட்ட கவரில் வரும் 22ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.