டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் 2019 டிசம்பர் 13ஆம் தேதி நிகழ்ந்த கலவரத்திற்கு மாணவர் ஷர்ஜீல் இமாம் நிகழ்த்திய உரை தான் காரணம் என்று டெல்லி காவல்துறையால் குற்றம்சாட்டப்பட்டது.
இதனையடுத்து ஸ்ரீ ராஜேஷ் தியோ தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில், சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், ஷர்ஜீல் இமாம் மீது தேச துரோகம் ( 124 ஏ ஐ.பி.சி), பகைமையை ஊக்குவித்தல் (153 ஏ ஐ.பி.சி) ஆகிய பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜாமியா சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டம் : துணைக் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது! கைது செய்யப்பட்ட கலகக்காரர்களுக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிகை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஒரு துணை குற்றப்பத்திரிகை இன்று எம்.எம். சாகேத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஜாமியா பகுதியில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மாணவர்கள் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்ட அணிவகுப்பைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாதுகாப்புப்படையினர் நுழைந்த பின்னர் வன்முறைகள் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.