தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி தீர்ப்பில் மறுபரிசீலனை இல்லை - சன்னி வக்பு வாரியம் அறிவிப்பு

டெல்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய இட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை மனுத்தாக்கல் செய்யப்போவது இல்லை என சன்னி வக்பு வாரியம் தெரிவித்துள்ளது.

Ayodhya case
Ayodhya case

By

Published : Nov 26, 2019, 2:32 PM IST

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நில விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அறங்காவலர் குழு ஒன்றை மூன்று மாதத்துக்குள் அமைத்திடவும், மாற்று இடத்தில் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கியும் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து தனது அதிருப்தியை தெரிவித்த சன்னி வக்பு வாரியம் தீர்ப்பை எதிர்த்து மறுபரிசீலனை மனு அளிக்க ஆலோசனை நடத்தியது. இது குறித்து ஆலோசனை நடத்திய 8 பேர் கொண்ட குழு தீர்ப்புக்கு எதிராக மறுபரிசீலனை செய்வதில்லை என முடிவெடுத்துள்ளது. 8 பேர் கொண்ட குழுவில் மறுபரிசீலனைக்கு எதிராக 6 பேர் கருத்து தெரிவித்ததால் இம்முடிவு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிங்க: 'அம்பேத்கர் நம்மைக் கண்டு பெருமை கொண்டிருப்பார்' - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உ
ரை

ABOUT THE AUTHOR

...view details