அயோத்தியில் இருதரப்புக்கு இடையேயான இடப்பிரச்னை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய இடத்தை ராம் லல்லா அமைப்புக்கும், சன்னி வஃக்பு வாரியத்துக்கு புதிதாக ஐந்து ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, உத்தரப் பிரதேச அரசு அயோத்தி மாவட்டத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தினை மசூதி கட்டிக்கொள்ள சன்னி வஃக்பு வாரியத்துக்கு ஒதுக்கியது.
அந்த நிலத்தினை சன்னி வஃக்பு வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது. சன்னி வஃக்பு வாரியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் அயோத்தி மாவட்டம் சோஹாவால் தாலுகா தன்னிப்பூர் கிராமத்தில் அமைந்துள்ளது.
அயோத்தியில் பல நூற்றாண்டுகளாக இருதரப்புக்குமிடையே நிலவிவந்த பிரச்னையில் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பளித்தது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க:மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும்விதமாக மதராசாவில் இந்து இணையர்களுக்குத் திருமணம்