கடந்த 2014ஆம் ஆண்டு, திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசிதரூர் காதல் திருமணம் செய்து கொண்ட சுனந்தா புஷ்கர், நட்சத்திர விடுதி ஒன்றில் பிணமாகக் கிடந்தார். இவர் தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று முடிவுக்கு வராமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இது தொடர்பாக சசிதரூர், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
சுனந்தா புஷ்கர் மரணம்: சசிதரூரை கைது செய்ய சாட்சிகள் உள்ளன என காவல்துறை தரப்பில் வாதம்! - Sunanda Pushkar Case:
டெல்லி: சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சசி தரூரை கைது செய்ய சாட்சிகள் இருப்பதாக நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் தனது வாதத்தை தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணையில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீ வத்சவா நீதிமன்றத்தில் வாதிடும்போது, “சசிதரூருக்கு பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெகர்தரர் என்ற பெண்மணிக்கும் இடையில் தொடர்பு இருந்தது. இது தொடர்பாக இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டது. சுனந்தாவை விவாகரத்து செய்து விட்டு மெகர்தரரை திருமணம் செய்ய தரூர் திட்டமிட்டிருந்தார். இது புஷ்கருக்கு தெரியவரும் சமயத்தில் அவர் இறந்துள்ளார். இதனால் தரூர் மீது கொலை அல்லது, தற்கொலைக்குத் தூண்டிய பிரிவுகளில் வழக்குப் பதிய அனுமதி வேண்டும் என வாதிட்டார்.
இதனை சசிதரூரின் வழக்கறிஞர் முழுமையாக மறுத்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுவது ஆதாரமற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் மருத்துவப் பரிசோதனையைப் படிக்கவில்லை என நினைக்கிறேன். இந்த மருத்துவ அறிக்கையில் சுனந்தா கொலை அல்லது தற்கொலை செய்யப்பட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், ஏதோ சில உணவு குழாயிலிருந்த சில பொருட்கள் காரணமாக இறந்துள்ளார் என்றும் தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.
TAGGED:
Sunanda Pushkar Case: