தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோலாகலமாக தொடங்கியது புதுச்சேரி கோடை விழா

புதுச்சேரி: கலை பண்பாட்டு துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையமும் இணைந்து நடத்தும் புதுச்சேரி கோடை விழா இன்று கோலாகலமாக தொடங்கியது.

கோலாகலமாக தொடங்கியது புதுச்சேரி கோடை விழா

By

Published : May 17, 2019, 11:52 PM IST

புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை, மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையமும் நடத்தும் புதுச்சேரி கோடை விழா, கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைத் திடலில் இன்று தொடங்கியது. கலை பண்பாட்டுத் துறை செயலர் தேவ சிங், மணி அடித்து விழாவை தொடக்கி வைத்தார். புதுச்சேரி மாநில கலைஞர்கள், ஒடிசா மாநில கலைஞர்கள் பங்கேற்று பரத நாட்டிய நிகழ்ச்சியுடன் விழா தொடங்கப்பட்டது. இவ்விழா புதுச்சேரி லாஸ்பேட்டை, பெரிய காலாப்பட்டு ,புதுச்சேரி கடற்கரை சாலை உள்ளிட்ட 3 பகுதிகளில் நடைபெறுகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் புதுச்சேரி கலைஞர்கள் பாரம்பரிய கலை வடிவங்களை பொதுமக்களுக்கு நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.

கோலாகலமாக தொடங்கியது புதுச்சேரி கோடை விழா

நமது பாரம்பரிய இந்தியக் கலைகள் மனிதநேயத்தை, மனித உறவுகளை, மனித உணர்வுகள், அன்பு, கருணையை பிரதிபலிக்க செய்வது இக்கலைவிழாவின் நோக்கம். இவ்விழாவில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details