பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான சுகோய்-30 விமானம் அஸ்ஸாம் மாநிலம், மிலன்பூரில் நேற்று விபத்துக்குள்ளானது. இது குறித்து, பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ரத்னக்கர் சிங் கூறுகையில், 'விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது விவசாய நிலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அஸ்ஸாமில் விமானம் விபத்து! - பாதுகாப்பு துறை
திஸ்பூர்: பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று அஸ்ஸாமில் விபத்துக்குள்ளானது.
விமான விபத்து
விபத்துக்குள்ளான விமானத்திலிருந்த இரண்டு பைலட்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விபத்துக்கான காரணத்தை அறிய பாதுகாப்புத் துறை விசாரணை நடத்திவருகிறது' என்றார்.
இதேபோல், கடந்த ஜூன் 3ஆம் தேதி ஏஎன்-32 ரக விமானம் 13 பேருடன் அஸ்ஸாம் மாநிலம், ஜோர்ஹட் விமானத்தளத்திலிருந்து புறப்பட்ட 30ஆவது நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது கவனிக்கத்தக்கது.