புதுச்சேரி இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவலராக இருப்பவர் பாலாஜி. ஆறு மாதத்திற்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. கோரிமேடு பகுதியிலிருக்கும் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள IRBN அலுவலகத்தில் நேற்று பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு காவலர் பாலாஜி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலை நடைபயணம் செய்த காவலர்கள், சடலத்தைப் பார்த்து தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.