மேற்கு வங்கம் மாநிலம் புருலியா மாவட்டம் சுக்னிபாசா கிராமத்தைச் சேர்ந்த சுகு மண்டி, அஸ்தமி கிஸ்கு, ரமணி குஸ்கு என்ற மூவர் கிராமத்தைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளின் சுவர்களிலும் வண்ண ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தியுள்ளனர்.
வீட்டு வெளிப்புற சுவர்களில் மின்னும் வண்ண ஓவியங்கள்! - Village
புருலியா: மேற்கு வங்காளத்தில் உள்ள சுக்னிபாசா கிராமத்தில் வீடுகளின் வெளிப்புற சுவர்கள் வண்ண ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டிருப்பது, பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
வண்ண ஓவியங்கள்
இது குறித்து அவர்கள் கூறும்போது, ’எங்கள் கிராமத்தில் பெரும்பாலும் மண் வீடுகளே உள்ளன. எனவே, அதனைச் சுத்தமாகவும், அழகியலோடும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே வீடுகளின் வெளிப்புற சுவர்களில் படம் வரைந்தோம். இது முழுவதும் தன்னார்வத்திலேயே எடுத்த முயற்சி. அரசு எங்களுக்கு அங்கீகாரமோ, நிதி உதவியோ அளித்தால் மற்ற கிராமங்களிலும் வரையத் தயார்’ என்கின்றனர்.