இது தொடர்பாக அவர் கர்நாடக அரசுக்கு எழுதிய கடிதத்தில், “குளிரூட்டப்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பெருகுவதால் மால்கள், திரையரங்குகளை மூட வேண்டும். மருந்தகம், மளிகைக் கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளை மட்டுமே திறந்த நிலையில் வைத்திருக்க அரசு அனுமதிக்க வேண்டும்.
தொற்றுநோய் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைகளால் அனைத்து நோயாளிகளையும் நிர்வகிக்க முடியாது. ஆகவே அரசு மருத்தவமனையில் 500-700 படுக்கைகள் புதிதாக ஏற்படுத்தப்பட வேண்டும்.