தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கந்தர்வக்குரலோன் எஸ்பிபிக்கு கடற்கரை மணலில் சிற்பாஞ்சலி செலுத்திய சுதர்ஸன் பட்நாயக் ! - எஸ்பிபிக்கு மணல் சிற்பாஞ்சலி

புவனேஷ்வர் : மறைந்த திரையிசைப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உருவத்தை பூரி கடற்கரை மணலில் பதித்து சிற்பி சுதர்சன் பட்நாயக் சிற்பாஞ்சலி செலுத்தினார்.

கந்தர்வக்குரலோன் எஸ்பிபிக்கு கடற்கரை மணலில் சிற்பாஞ்சலி செலுத்திய சுதர்ஸன் பட்நாயக் !
கந்தர்வக்குரலோன் எஸ்பிபிக்கு கடற்கரை மணலில் சிற்பாஞ்சலி செலுத்திய சுதர்ஸன் பட்நாயக் !

By

Published : Sep 25, 2020, 8:08 PM IST

Updated : Sep 25, 2020, 10:37 PM IST

பத்ம பூஷண் விருதுப் பெற்ற திரையிசை பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மறைவை ஒட்டி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் அவரது உருவம் பதித்த மணற் சிற்பத்தை செதுக்கினார்.

இதில், 1948-2020 ஆம் ஆண்டை குறிப்பிட்டு ஜாம்பவான் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி என்ற வாசகம் குறிப்பிட்டிருந்தது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பிரம்மாண்ட மணல் சிற்பங்களை உருவாக்கியுள்ள அவர் மறைந்த பாடகர் எஸ்பிபியின் மணல் சிற்பத்தை, சுமார் 3 மணி நேரத்தில் கடும் உழைப்பில் உருவாக்கியுள்ளார்.

இந்த மணல் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Last Updated : Sep 25, 2020, 10:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details