கரோனா தொற்றை இந்தியா எதிர்கொள்ளும் விதம்தான் ஊரடங்கின் வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது என்றும், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புதான் கரோனா வைரஸ் தொற்றை வெல்வதற்கான திறவுகோல் என்றும் முன்னாள் பிரதமரும் பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின்போது மன்மோகன் சிங் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும் மன்மோகன் சிங் பேசியது குறித்து ட்வீட் செய்துள்ள காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா, ”நமக்கு கிடைக்கும் அனைத்து துறைகள் சார்ந்த ஆதார வளங்களை அடிப்படையாகக் கொண்டுதான் கரோனாவுக்கு எதிரான நம் போர் நிர்ணயிக்கப்படும். எனவே நம்மிடமுள்ள பிரச்னைகளில் கவனம் செலுத்துவது முக்கியம்” என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளதும், வருகிற மே மூன்றாம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாடு திரும்பும் வெளிநாட்டினர்!