தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

57 விமானிகள் பணிநீக்கம்...! மறுநாளே ஆட்சேர்ப்பு பணியில் ஏர்இந்தியாவின் துணை நிறுவனம்...! - ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர்

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் 57 விமானிகளை பணிநீக்கம் செய்த அடுத்த நாளே, ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் ஆட்சேர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ர்
இந்தியாவில் ஏர்

By

Published : Aug 18, 2020, 1:50 AM IST

கரோனா தாக்கத்தால் விமான போக்குவரத்து துறை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது, உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வந்தாலும், கரோனா அச்சத்தால் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனம் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், ஆரம்பம் முதலே பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தது. ஊதியம் இல்லாத விடுமுறையும் ஊழியர்களுக்கு வழங்கியது.

இதுமட்டுமின்றி ஊதியம் கொடுக்க முடியவில்லை என்ற காரணத்தை காட்டி 57 விமானிகளை திடீரென பணிநீக்கம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அச்சமயத்தில் விமானத்தை இயக்கி கொண்டிருந்தவர்கள். இவர்கள் முன்பு ராஜினாமா கடிதம் வழங்கியதாகவும், பின்னர் ராஜினாமவை திரும்ப பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏரில் கமண்டர் மற்றும் முதல் அலுவலர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய தொடங்கியுள்ளதற்கு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 57 விமானிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி ஊழியர்களை வேலையைவிட்டு நீக்கிவிட்டு, தற்போது புதிய ஊழியர்கள எடுப்பது எப்படி சரியான வழிமுறை. அலையன்ஸ் ஏரின் ஆட்சேர்ப்பு பணி வரும் செப்டம்பர் 18ஆம் தேதி நிறைவடைகிறது.

முன்னதாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், "பணிநீக்கம் செய்யப்பட்ட விமானிகள் நிரந்தர மற்றும் ஒப்பந்ததாரர்கள் உள்ளடக்கியுள்ளனர். சில விமானிகள் தங்களது ராஜினாமாக்களை திரும்ப பெற்றனர். ஏர் இந்தியாவுக்கு இந்த விமானிகளின் சேவை தற்போது தேவையில்லை, அவர்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது" எனக் குறிப்பிடப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details