பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ஜூன் 14ஆம் தேதி மும்பையிலுள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியது. தேசிய அளவில் கவனம் பெற்ற சுஷாந்தின் மரணம், பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிசம் காரணமாகத்தான் நிகழ்ந்ததாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டிவந்தனர்.
இந்த விவகாரத்தில் பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களாம ’கான்கள்’ உள்பட பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் பலரது பெயர்கள் அடிபட்டது. அதன்படி இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை காவல் துறையினர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, மேலாளர் ரேஷ்மா ஷெட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டது.
இச்சூழலில், சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கை சிபிஐ எடுத்துக்கொள்ளலாமா என்பது குறித்து தனது உதவியாளரும் வழக்கறிஞருமான இஸ்கரன் பண்டாரியை ஆய்வு மேற்கொள்ளக் கூறியதாக ட்வீட் செய்திருந்தார். அவர் தற்போது ஆய்வை முடித்து, வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று தெரிவித்ததால், சுஷாந்தின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டுமென வலியுறுத்தி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.