ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைந்த சுபஹானி கஜா மொய்தீன், பல நாச வேலைகளில் நேரடியாக ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு ஈராக் நாட்டிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டபோது தேசிய புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
கிடைத்த தகவலின்படி, கஜா மொய்தீன் துருக்கி வழியாக சட்டவிரோதமாக ஈராக்கிற்குள் நுழைந்து மொசூலில் இருந்து ஈராக்கிற்கு எதிராக பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இவரை கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இவ்வழக்கு தொடர்பாக முன்னாள் இந்திய தூதரக அலுவலர் உள்பட 46 பேரின் சாட்சிகளை நீதிமன்றம் விசாரித்தது.