தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இளம் பெண் தற்கொலை: ஸ்டுடியோ உரிமையாளரை தேடும் போலீஸ் - புதுவை இளம் பெண் தற்கொலை

புதுச்சேரி: புகைப்பட ஸ்டுடியோ உரிமையாளர் தனது ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்த இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததையடுத்து அப்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

pondicherry studio
pondicherry studio

By

Published : Dec 5, 2019, 8:59 AM IST

புதுவை வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்த்தவர் மதுரா. இவர் சின்னக்கடை காந்தி வீதியில் புகைப்பட ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ஸ்டுடியோவில் அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் வேலை பார்த்து வந்தார்.

தனலட்சுமிக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தனலட்சுமி திடீரென உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் ஒடிவந்து தீயை அணைத்து தனலட்சுமியை சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நேற்று (டிச.4) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக அரசு மருத்துவமனையில் சேர்த்ததும் புதுவை நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்தார். அதில், தனலட்சுமி வேலைபார்த்து வந்த ஸ்டுடியோவின் உரிமையாளர் மதுரா கடந்த ஜனவரி மாதம் சாப்பாட்டில் மயக்கமருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார். இதனால் மனமுடைந்து தான் தற்கொலை செய்ய முயன்றேன் என்று கூறினார்.

இதற்கு நீதிபதி இது குறித்து ஏன் காவல்துறையினரிடம் அப்போது புகார் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு, தனலட்சுமி கூறியதாவது, மதுரவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நான் புகார் கொடுத்தால் அவருடைய குடும்பம் நாசமாகிவிடும் என்பதால் புகார் கொடுக்கவில்லை. பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நான் இன்னொருவரை திருமணம் செய்து அவருக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. எனவே தான் உயிரை மாய்த்துக்கொள்ள தீக்குளித்தேன் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து காவல்துறையினர் மதுரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை அறிந்த மதுரா தற்போது தலைமறைவாகியுள்ளார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details