குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் “தடுப்பு மையங்கள்” அமைத்து அதற்குள் பொதுமக்களை அடைத்து சித்ரவைதைப்படுத்துவதுபோல் காட்சிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் நூதன போராட்டம்.! - குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Students make replica of detention camp protest against CAA, NRC in Kolkatta
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் காந்தி சிலையிலிருந்து விவேகானந்தர் இல்லம் நோக்கி கடந்த 24ஆம் தேதி நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக மாபெரும் பேரணி நடந்தது. இந்தப் பேரணியில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம் - திமுக மகளிரணி கோலம் வரைந்து எதிர்ப்பு