இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26ஆம் நாளை அரசியலமைப்பு சட்ட நாள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. 70ஆவது அரசியலமைப்பு சட்ட நாள் விழா புதுச்சேரி ராஜ் நிவாஸ் சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த விழாவில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கலந்துகொண்டு கல்லூரி மாணவர்களுடன் உரையாடினார்.
அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் கடை வியாபாரிகள் குடிமக்கள் சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுவதால் நிலத்தடி நீர் ஆதாரத்தை நாம் தான் கெடுக்கிறோம். அரசு அலுவலர்கள் சரியாக நகரை பராமரித்து சுத்தமாக வைத்துக் கொள்ள தவறிவிட்டனர்.
அலுவலர்களை எதிர்பார்த்து நாம் காத்துக் கொண்டிருப்பதை தவிர்த்து நம் தெருவில் இருக்கும் குப்பைகளை நாமே அகற்ற முயற்சி செய்வோம். சட்ட நாளான இன்று நகரை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உறுதியேற்போம்" என்று பேசினார்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் தலையை வெட்டிய பெண் வீட்டாரின் கொடூரச் செயல்!