தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கைகழுவ சென்ற மாணவர் மீது கிரிக்கெட் மட்டை விழுந்து உயிரிழப்பு - The tragic incident near Alappuzha

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மதிய உணவு முடித்து விட்டு கைகழுவச் சென்ற மாணவர் மீது எதிர்பாராத விதமாக கிரிக்கெட் பேட் தலையில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பள்ளி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவர் நவினீத்

By

Published : Nov 23, 2019, 9:58 AM IST

கேரள மாநிலம், ஆலப்புழா அடுத்த மலாவிகெரே பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் புதுப்பள்ளிகுன்னு பகுதியைச் சேர்ந்த நவினீத்(11) என்ற மாணவர் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் வழக்கம்போல் பள்ளியில் மதிய உணவை முடித்துவிட்டு கைகழுவுவதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள குழாயடிக்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் சகமாணவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் மாணவர்கள் கையில் இருந்த கிரிக்கெட் மட்டை கை நழுவி நவினீத்தின் தலையில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாணவரை ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவர் நவினீத்


இதையும் படிங்க:அஸ்ஸாமில் இயங்கும் தனித்துவமான பள்ளி!

ABOUT THE AUTHOR

...view details