தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்திலுள்ள பள்ளி ஒன்றின் விடுதியில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மாணவர்கள் பலரும் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், விடுதி அறையில் சிக்கித் தவித்த குழந்தைகளைப் பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
விடுதி அறையில் மின்கசிவால் தீ விபத்து: சிறுமி உயிரிழப்பு! - dies
ஹைதராபாத்: தெலங்கானாவின் கம்மம் மாவட்டம் பள்ளி விடுதியில் மின்கசிவு ஏற்பட்டதில் 10 வயது சிறுமி மூச்சுத் திணறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதி அறையில் மின் கசிவால் தீ விபத்து
இருப்பினும், எதிர்பாராதவிதமாக ஸ்பந்தனா என்னும் 10 வயது சிறுமி மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறை, தீ விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. சிறுமி ஒருவர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.