தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயத்தைக் கற்றுத் தரும் அதிசயப் பள்ளி! - விவசாயத்தைக் கற்றுத் தரும் கர்நாடக பள்ளி

பெங்களூரு: கர்நாடகாவிலுள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விவசாயமும் ஒரு பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

Paddy harvesting at udupi

By

Published : Nov 17, 2019, 1:02 PM IST

Updated : Nov 17, 2019, 3:50 PM IST

இப்போதுள்ள பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களுக்கு புத்தகத்தைத் தாண்டி, வேறு எதையும் கற்றுத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது.

ஆனால், கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியோ, இது போன்ற விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியிலுள்ள மாணவர்களுக்கு ஆண்டுதோறும் விவசாயமும் ஒரு பாடமாகவே கற்பிக்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளியிலுள்ள மாணவர்களுக்கு நாற்று நடுவது, சாகுபடி செய்வது உள்ளிட்ட பல விவசாயம் சார்ந்த வேலைகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதை மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொள்கின்றனர்.

விவசாயத்தைக் கற்றுத் தரும் அதிசயப் பள்ளி

மேலும், விவசாயத்தைப் பற்றி விவசாய நிலங்களிலேயே விவசாயிகளிடமிருந்தே கற்றுக்கொள்வது தங்களுக்குப் பெரிய உதவியாக இருப்பதாகக் கூறுகின்றனர், அப்பள்ளி மாணவர்கள்.

இதையும் படிங்க: அக்னி 2 ஏவுகணை இரவு நேரச் சோதனை வெற்றி!

Last Updated : Nov 17, 2019, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details