டெல்லி: புவி அறிவியல் அமைச்சகத்தின் காற்று தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி (SAFAR) வெளியிட்டுள்ள தகவலின்படி, டெல்லியைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எரிக்கப்படும் பண்ணைக் கழிவுகளால் டெல்லி, தேசிய தலைநகர் பகுதிகளில் தொடர்ந்து காற்றின் தரம் குறைந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை மட்டும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மூன்றாயிரத்து 216 பண்ணைக் கழிவு எரிப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.