தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாய கழிவுகளை எரிக்கும் பஞ்சாப் விவசாயிகள்... காற்று மாசு ஏற்படும் அபாயம்! - பேடோவால் கிராமம்

லூதியானா (பஞ்சாப்): பேடோவால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், தடை உத்தரவையும் மீறி விவசாய கழிவுகளை எரித்து வருகின்றனர்.

irw
fire

By

Published : Nov 22, 2020, 7:16 PM IST

பஞ்சாப் மாநில விவசாயிகள் தங்கள் விவசாய கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகை காரணமாக காற்று மாசு ஏற்படுவதாக புகார் ஏழுந்தது. டெல்லியில் காற்று மாசு உச்சத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த கழிவுகளை பொதுவெளியில் எரிப்பதற்கு நீதிமன்றமும் சமீபத்தில் தடை விதித்திருந்தது. இருப்பினும், இதற்கான மாற்று ஏற்பாடுகள் மத்திய, மாநில அரசுகள் எடுக்கவில்லை.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பேடோவால் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலர், தடை உத்தரவையும் மீறி விவசாய கழிவுகளை எரித்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ஹர்ஜிந்தர் சிங் கூறுகையில், "கழிவுகளை எரிப்பதற்கு அரசாங்கம் எந்த விதமான உதவியோ அல்லது மானியமோ தரவில்லை‌. திறந்த நிலத்தில் கழிவுகளை அழித்து வருகிறோம். இதற்கே பணம், நேரம் செலவாகுகிறது. அடுத்தக்கட்ட விளைச்சலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லை" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details