வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் இன்று(மே 20) பிற்பகல் முதல் மாலைக்குள் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், ஏற்கனவே பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் 3 லட்சம் பேரும், ஒடிசாவில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேரும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று கரையைக் கடக்கும் ஆம்பன் புயல்; கடலோரப் பகுதிகளில் 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று
புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் இன்று கரையைக் கடக்கும் நிலையில் ஒடிசா, மேற்கு வங்க மாநில கடலோரப்பகுதிகளில் 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசிவருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஒடிசா மாநிலம் பாரதீப் பகுதியில் காற்றின் வேகம் 110 கி.மீ. வேகத்தை எட்டியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதையடுத்து, சண்டபாலி பகுதியில் 74 கி.மீ. வேகத்திலும், புவனேஸ்வரில் 37 கி.மீ. வேகத்திலும், பாலசோர் பகுதியில் 61 கி.மீ. வேகத்திலும் மற்றும் பூரியில் 41 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசிவருகிறது. அதேபோல மேற்கு வங்க மாநிலம் பக்காலி, கொல்கத்தா கடலோரப் பகுதிகளில் 100 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் சூறைக்காற்று வீசிவருகிறது. தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர்(என்.டி.ஆர்.எஃப்) பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:உ.பி.யில் சரக்கு வாகன விபத்து; 6 விவசாயிகள் உயிரிழப்பு