கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சோப் மூலம் அடிக்கடி கைகளைக் கழுவியோ அல்லது கிருமிநாசினிகளைப் பயன்படுத்தியோ கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களிலும் சோடியம் ஹைபோகுளோரைடும் ஹைட்ரஜன் பெராக்சைடும் கிருமிநாசினிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவற்றை மனிதர்கள் மீது நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது என்று பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சோடியம் ஹைபோகுளோரைட் என்பது ஒரு வலுவான கிருமிநாசினி. அசுத்தமாக இருக்கும் பொது இடங்களைச் சுத்திகரிக்க இதைப் பயன்படுத்தலாம். ஆனால் இவை நேரடியாகத் தோலில்படும்பட்சத்தில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளன. இதேபோல், ஹைட்ரஜன் பெராக்சைடையும் ஒரு அசுத்தமான இடங்கள் மீதே பயன்படுத்த வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது இதுபோன்ற கிருமிநாசினிகள்தான் அடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.