நாடு முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துவருகிறது. உத்தரப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 32 ஆயிரத்து 362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 21 ஆயிரத்து 127 பேர் குனமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 862 பேர் உயிரிழந்துள்ளனர்.
உ.பி.யில் முழு ஊரடங்கு: பாலைவனம்போல் காட்சியளிக்கும் நகரங்கள் - கரோனா வைரஸின் தாக்கம்
லக்னோ: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.

இந்நிலையில், மாநிலத்தில் அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வாரத்தின் இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது. ஜுலை 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி ஜுலை 13ஆம் தேதி காலை ஐந்து மணிவரை தளர்வுகள் இல்லா ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி, மருந்து ஆகியவற்றை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் முக்கிய நகரங்கள் ஆள் நடமாட்டமின்றி பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.