தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கைத் தேவை - பாஜக - டெல்லி வன்முறை, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, பிரேம் சுக்லா, ஈடிவி பாரத், தாஹீர் ஹூசேன், அமித் ஷா

டெல்லி: டெல்லி கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கைத் தேவை என பாஜக வலியுறுத்தியுள்ளது.

prem shukla  BJP National Spokesperson  Congress chief Sonia Gandhi  Sonia Gandhi  Union Home Minister Amit Shah  leader Tahir Hussain  டெல்லி வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: பாஜக  டெல்லி வன்முறை, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, பிரேம் சுக்லா, ஈடிவி பாரத், தாஹீர் ஹூசேன், அமித் ஷா  Strict action will be taken against the rioters: BJP on Delhi violenc
prem shukla BJP National Spokesperson Congress chief Sonia Gandhi Sonia Gandhi Union Home Minister Amit Shah leader Tahir Hussain டெல்லி வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: பாஜக டெல்லி வன்முறை, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, பிரேம் சுக்லா, ஈடிவி பாரத், தாஹீர் ஹூசேன், அமித் ஷா Strict action will be taken against the rioters: BJP on Delhi violenc

By

Published : Mar 2, 2020, 2:24 PM IST

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், “டெல்லி வன்முறையைத் தடுக்க காவல் துறை சாத்தியமான அனைத்து நடவடிக்கையையும் எடுத்தது. தற்போது டெல்லியில் நிலைமை கட்டுக்குள் உள்ளது.

ஆகவே யாரும் ஆத்திரமூட்டும் பேச்சுகளில் ஈடுபட வேண்டாம். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் கேள்விக்குள்ளாகும் நிலையில், மத்திய அரசுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், தாஹீர் ஹுசேனை பாதுகாக்கிறார்.

தாஹீர் ஹுசேன் மீது உளவுத் துறை அலுவலரைக் கொன்றதாகக் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. தற்போது தாஹீர் தலைமைறைவாகிவிட்டார். அவர் கைதாகும்பட்சத்தில் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.

இதில் யார் யார் ஈடுபட்டுள்ளார்கள் என்ற உண்மையும் தெரியவரும்” என்றார். டெல்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்ற விமர்சனத்துக்கு பதிலளித்த சுக்லா, “வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் அமித் ஷாவும் உயர் அலுவலர்களும் தீவிரமாக ஈடுபட்டனர்.

டெல்லி வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கைத் தேவை - பாஜக

இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் கட்சியின் மூத்தத் தலைவர்கள் பகிரங்கமாகக் கண்டித்துள்ளனர்” என்றார்.

மத்திய அரசும், டெல்லியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசும் டெல்லி வன்முறையில் ஊமையாகிவிட்டதாக சோனியா காந்தி குற்றஞ்சாட்டினார். டெல்லி கலவரம் தொடர்பாக அறிக்கை தாக்கல்செய்ய காங்கிரஸ் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஹைட்ரோகார்பன் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக எம்.ஏ. போப்டே அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details