ஒடிசாவின் அரிசி கிண்ணம் என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டதுதான் பர்கர் மாவட்டம். ஆனால் தற்போது அதிக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை அந்த மாவட்டம் எண்ணிக் கொண்டிருக்கிறது. அதிலும் மாநிலத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை பர்கர் மாவட்டத்தில்தான் அதிகமாக உள்ளது. இதற்கெல்லாம் காரணம் என்ன?
விவசாயத்தில் ரசாயனம் கலந்த உரங்கள், பூச்சிக் கொல்லிகளை பயன்ப்படுத்தியதின் விளைவு மாவட்டத்தை புற்றுநோயை ஆட்க்கொள்ள வைத்துள்ளது. இதனால் எப்படி புற்றுநோய் உண்டாகியிருக்கும் என உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், அதற்கும் பதிலிருக்கிறது.
ரசாயனம் கலந்த உரங்கள், பூச்சிக் கொல்லிகளை விவசாய நிலத்தில் தெளிக்கும் போது, சுவாசிக்கும் காற்று மாசுபடுகிறது, நீர் ஆதாரங்களில் ரசாயனம் கலக்கிறது. இதனால்தான் மாவட்ட முழுவதும் புற்றுநோயாளிகள் அதிகரித்துவருகின்றனர்.
1950ஆம் ஆண்டு முதல் மாவட்டம் முழுவதும் நெல், காய்கறிகளை பயிரிட்டுவருகின்றனர். இதற்காக ஹிராகுட் நீர் தேக்கத்திலிருந்து நீரை வயல்களுக்கு பாய்ச்சியுள்ளனர். இதில் பல விவசாயிகள் ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து விவசாயம் செய்துவந்துள்ளனர். இந்த விவசாயிகள் நல்ல விளைச்சலை காண மண்ணில் ரசயான உரங்களை தூவியுள்ளனர். இதனால் மண் வளமின்றி, மாவட்டத்தின் நீர் வளமும் பாதிப்படைந்துள்ளது.