ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்டும் நோக்கில் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இக்கூட்டத்தில் பங்கேற்ற பஞ்சாப் நிதியமைச்சர் மன்பிரீட் சிங் பாதல், இழப்பீடு வழங்க மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பிகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, நிதிச்சுமையைத் தீர்க்க மாநில அரசுகள் கடன் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறினார். மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூர், மாநில நிதியமைச்சர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.