கோவிட்-19 பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. இதைக் கருத்தில்கொண்டு மார்ச் 16ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் மீண்டும் கணிசமாக உயர்ந்துவருகிறது.
இந்தியாவிலும் 82 நாள்களுக்குப் பின், ஜூன் 8ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 53 காசுகளும், டீசல் லிட்டருக்கு 52 காசுகளும் உயர்த்தப்பட்டன. அதைத்தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டன. கடந்த 10 நாள்களில் மட்டும் பெட்ரோல் விலை 5.47 ரூபாயும், டீசல் விலை 5.80 ரூபாயும் உயர்ந்துள்ளது.
உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துபோது விலையை குறைக்காத மத்திய அரசு, இப்போது மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.