வாரணாசி:ஒரு நூற்றாண்டுக்கு முன்பு திருடப்பட்ட அன்னபூர்ணா தெய்வத்தின் சிலை வாரணாசியில் உள்ள தனது அசல் வீட்டிற்கு திரும்பி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
வாரணாசியில் நடைபெற்ற தேவ் தீபாவளி மஹோத்ஸவத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், "100 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அன்னபூர்ணா தெய்வத்தின் சிலை இப்போது மீண்டும் இங்கு வந்து கொண்டிருக்கிறது. மாதா அன்னபூர்ணா, அவளுடைய அசல் வீட்டிற்கு திரும்பி வருவது பெரும் அதிர்ஷ்டம். தெய்வங்களின் சிலைகள் நமது விலைமதிப்பற்ற மரபின் ஒரு பகுதியாகும்" என்றார்
தொடர்ந்து, "இதற்கு முன்னர் இந்தளவுமுயற்சி செய்திருந்தால், நாடு இதுபோன்ற பல சிலைகளை திரும்பப் பெற்றிருக்கும். ஆனால் சிலருக்கு வித்தியாசமான சிந்தனை இருக்கிறது. நம்மைப் பொறுத்தவரை, பாரம்பரியம் என்றால் நாட்டின் பாரம்பரியம், ஆனால் சிலருக்கு, பாரம்பரியம் என்றால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களது குடும்பம் பெயர். நம்மைப் பொறுத்தவரை, பாரம்பரியம் என்பது நம் கலாச்சாரம், நமது நம்பிக்கை. அவர்களைப் பொறுத்தவரை, பாரம்பரியம் என்றால் அவர்களின் சொந்த சிலைகள், அவர்களின் குடும்ப புகைப்படங்கள் "என்று அவர் மேலும் கூறினார்.
தேசத்துக்காக உயிரைக் கொடுத்த அனைவருக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.
"தேவ் தீபாவளி தினத்தன்று, தேசத்துக்காக உயிரை மாய்த்திய அனைவருக்கும் எனது அஞ்சலி செலுத்துகிறேன். விரிவாக்க சக்திகளுக்கு, இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பவர்களுக்கு அல்லது அதை உடைக்க முயற்சிப்பவர்களுக்கு தேசம் ஒரு பொருத்தமான பதிலை அளிக்கிறதிருக்கிறது.