தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிஎம்டபிள்யூ கார் களவு போய்விட்டது என நாடகமாடிய பங்குத்தரகர் கைது! - latest news about yes bank crisis

நொய்டா: பங்குச்சந்தை யெஸ் வங்கி பங்குகளில் முதலீடு செய்த பங்குகள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால், நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், அவ்வங்கியில் லோன் போட்டு வாங்கிய பிஎம்டபிள்யூ கார் களவு போய்விட்டது என நாடகமாடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

BMW robbery
BMW robbery

By

Published : Mar 18, 2020, 8:52 PM IST

யெஸ் வங்கி நெருக்கடியால் பணத்தை இழந்த பங்குத்தரகர், அதே வங்கியில் லோன் போட்டு வாங்கிய பிஎம்டபிள்யூ கார் களவு போய்விட்டது எனவும், லோன் பணத்தைத் திரும்ப செலுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். பின்பு காவல்துறை விசாரணை மேற்கொண்டபோது, அவர் ஒரு பங்குத்தரகர் என்று தெரியவந்துள்ளது.

சமீப காலமாக பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. யெஸ் வங்கியில் ஏற்பட்ட நெருக்கடியால் அவ்வங்கி பங்குகளும் சரிவைச் சந்திக்கின்றன. எனவே இவர் யெஸ் வங்கியில் முதலீடு செய்து பெரும் பணத்தை இழந்துள்ளார். பெருமளவு பணம் தன் கையை விட்டு போனதால், அதனை சரிசெய்ய யெஸ் வங்கியில் 40 லட்சம் லோன் போட்டு வாங்கிய பிஎம்டபிள்யூ கார் களவு போய்விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

பின்பு லோன் பணத்தைத் திரும்ப செலுத்த முடியாது எனவும் கூறியுள்ளார். இதுதொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டபோது, பங்குச்சந்தையில் இழந்த பணத்தை மீட்க இப்படி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:பஞ்சர் ஒட்ட வந்த காருடன் எஸ்கேப் ஆன இளைஞர்... அரை மணி நேரத்தில் சிக்கிய பரிதாபம்!

ABOUT THE AUTHOR

...view details