தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

100 ஊழல் ஊழியர்களுக்கு செக் வைக்கத் தயாராகும் மத்திய அரசு - மத்திய கணக்கர் ஆணையம்

டெல்லி: ஊழல் செயல்களில் ஈடுபட்டுள்ள 100 மத்திய அரசு ஊழியர்களை சட்டப்படி கைது செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை களமிறங்கியுள்ளது.

CVC

By

Published : Nov 12, 2019, 7:49 AM IST

மத்திய அரசின் சிபிஐ, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை இணைந்து மேற்கொண்ட புலனாய்வு நடவடிக்கையில் 100க்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் சிக்கியுள்ளனர்.

அவர்கள் மேற்கொண்டுள்ள ஊழல் செயல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டியுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ள மத்திய அரசின் ஒப்புதலுக்காகத் தயார் நிலையில் உள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தம் பதிவாகியுள்ள 51 வழக்குகளில் மேற்கண்ட நூறு அலுவலர்கள் பாதுகாப்புத்துறை, ரயில்வே அமைச்சகம், வருவாய்துறை, வங்கித்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, சுகாதாரத்துறை, நீர் மேலாண்மைத்துறை என பல்வேறு துறைகளின் கீழ் பணியாற்றிவருகின்றனர்.

இதில் சிலர் ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களின் விசாரணையின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளுக்காக அந்தந்த துறை சார்ந்த அமைச்சகங்கள், சில மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை காத்திருக்கிறது. இந்த நடைமுறைகள் நிறைவடைந்து மத்திய அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் மேற்கண்ட அலுவலர்களின் மீது கைது நடவடிக்கை பாயம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பாருங்க: பனிக்கட்டியைப் பார்த்ததும் என்ன ஒரு ஆனந்தம் அந்த பாண்டா கரடிக்கு!

ABOUT THE AUTHOR

...view details