இது தொடர்பாக புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், முதலமைச்சர் நாராயணசாமியை கண்டித்து பாஜக நடத்துவதாக அறிவித்திருந்த போராட்டம் மக்கள் நலனுக்காக ஒத்திவைக்கப்பட்டது என்றார். காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கிறதா? இல்லையா? என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், கேரளாவில் காங்கிரஸ் கட்சியை கம்யூனிஸ்ட் எதிர்க்கும் நிலையில், புதுச்சேரியில் ஆதரிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
'புதுச்சேரியை காங்கிரஸ் அல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' - non-congress-union-territory
புதுச்சேரி: புதுச்சேரியை காங்கிரஸ் அல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜக தலைவர் சுவாமி நாதன் சூளுரைத்துள்ளார்.
சுவாமி நாதன்
பாஜக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த சுவாமி நாதன், புதுச்சேரியை காங்கிரஸ் அல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டுடன் புதுச்சேரி இணைக்கப்படாது என மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி தெளிவுபடுத்திய பிறகும், அது தொடர்பாக முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து கூறி வருவது கண்டிக்கத்தக்கது என்றார்.