மத்திய அரசு திட்டங்கள் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் உள்ள காமராஜர் வளாகத்தில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண் மற்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பல்வேறு துறைகள் குறித்தும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிகளின் செயல்படுகள் குறித்தும் விவாதித்தனர். இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகையில், "மாணவர்களுக்கு சத்தான உணவுகள் வழங்கவேண்டும். கழிவறை வசதிகளை முழுமையாக அனைத்து அங்கன்வாடிகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டும்" என்றனர்.