கரோனா நோய் தொற்று பேரிடராக உருவெடுத்து நாடு முழுவதும் பரவிவரும் நிலையில், வைரஸ் பாதிப்பை எதிர்கொள்வதில் அனைத்து மாநிலங்களும் தீவிர கவனம் செலுத்திவருகின்றன. இந்தச் சூழலில் மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சையில் எந்தவித சிக்கலும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய சுகாதாரத் துறை கவனம் செலுத்திவருகிறது.
இந்தியாவில் நீரிழிவு நோய், காச நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இவர்களுக்கு தங்குதடையின்றி மருத்துவ உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வதை உறுதி செய்ய மருந்து உற்பத்தியாளர்களுக்கு சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.