தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"மாநில அரசுகளிடம் இருந்து ரூ.20 லட்சம் கோடி தேவை" - நிதின் கட்கரி - நிதின் கட்கரி

டெல்லி: பொருளாதார மேம்பாட்டு நிதிக்காக 50 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், மாநில அரசுகளும் 20 லட்சம் கோடி ரூபாய் தருவதற்கு முன்வரவேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

States should come forward
States should come forward

By

Published : May 28, 2020, 3:20 AM IST

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பொருளாதார மீட்பு நிதியுதவியாக மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க 50 லட்சம் கோடி ரூபாய் வரை தேவைப்படும் நிலை உள்ளதால், அதில் 20 லட்சம் கோடி ரூபாயை தர மாநில அரசுகள் முன்வர வேண்டும் என நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய நிதின் கட்கரி, 'மார்ச் மாதத்திலிருந்து சுமார் 6 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடிக்கிடந்தன, அவற்றை சீர்படுத்த வேண்டும். சுமார் 25 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில்களை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே நாட்டில் வேலையின்மை பிரச்னை இருந்த சூழலில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பணப்புழக்கம் குறைந்துள்ளது. பொருளாதாரத்தின் சக்கரம் மீண்டும் செயல்படுவதற்கு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்த 50 லட்சம் கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இதில் மத்திய அரசு 20 லட்சம் கோடியும், மாநில அரசுகள் 20 லட்சம் கோடி ரூபாயும், பொது மற்றும் தனியார் முதலீடுகளிலிருந்து 10 லட்சம் கோடி ரூபாயும் அரசுக்குத் தேவைப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தற்போதுள்ள மாவட்டதிலேயே தேர்வு

ABOUT THE AUTHOR

...view details