இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜீத் பவார், "கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
அந்த மாநிலங்கள் எல்லாம் ஒரு கட்சியின் கீழ் ஆட்சியில் உள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தாலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டாலும் மாநிலத்திலுள்ள மக்கள் பாதிக்கக்கூடாது என்று முதலமைச்சர் (உத்தவ் தாக்கரே) கூறியுள்ளார். இதுவே எங்கள் நிலைப்பாடு" என்று கூறியுள்ளார்.