தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் மாநிலங்கள்! - நிதி பற்றாக்குறை

மொத்த வரியின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15ஆவது நிதி குழு ஆணையத்தின் அறிக்கை இந்த பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணும்.

Money
Money

By

Published : Dec 12, 2019, 9:43 PM IST

பொருளாதார வீழ்ச்சி குடிமக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கீழ் நோக்கி அழைத்து சென்றுள்ளது. பல்வேறு துறையினர், தொழிலாளர்கள் ஆகியோர் வேலை வாய்ப்புகளை இழந்ததன் மூலம் அவர்களின் குடும்பம் தற்போது நிதி பற்றாக்குறையில் சிக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்த நிலை எந்த உதவியும் செய்யவில்லை. இதன் மூலம், குடிமக்கள் செலவிடும் திறன் வெகுவாக குறைந்துள்ளது. வரிப்பணம் மூலம் அரசு தனது கஜானாவை நிரப்பி கொள்கிறது.

இதனால், பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை. விளைபொருள் உற்பத்தியில் பெரும் நிறுவனங்கள் ஈடுபடாததால் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியின் விற்பனை வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்துள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் நிதி சிக்கலில் சிக்கி தவித்துவருகின்றன.

ஜிஎஸ்டி சட்டத்தின்படி, பல்வேறு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் பல்வேறு அளவிலான நிதியை மத்திய அரசு இழப்பீடாய் வழங்க வேண்டும். இதனால், மாநில வரியில் 14 விழுக்காட்டிற்கும் குறைவாக வருமானம் வந்துள்ளது. இரு மாதங்களுக்கு ஒரு முறை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்குகிறது. ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், 28 கோடி ரூபாய் நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட கடன் அளவை தாண்டி கேரள அரசு நிதியை வாங்கியுள்ளதால், அதன் நிர்வாகம் தற்போது நிதி சிக்கலில் தவித்துவருகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, ஒப்பந்த வரைவை மறு பரிசீலனை செய்வதற்கு ஜிஎஸ்டி சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பொருளாதார மந்த நிலையால் மாநில அரசுகளுக்கு கார்ப்பரேட் வரி கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டை தாண்டிய இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள சரியான முறையை உருவாக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

மொத்த வரியின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 15ஆவது நிதி குழு ஆணையத்தின் அறிக்கை இந்த பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணும். என்.கே. சிங் தலைமையிலான ஆணையம் அறிக்கையின் முடிவுகளை காலதாமதமாக வெளியிடும் என செய்திகள் வெளியாகிவருகிறது. இது உண்மையாகும்பட்சத்தில், மாநிலங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையத்தின்படி, மத்திய வரி விகிதத்தில் மாநிலங்களின் பங்கு 42 விழுக்காடு உயர்த்தப்படும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வாக்குறுதி அளித்திருந்தது. 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையம், மாநிலங்களின் பங்கை குறைத்தது. உறுதியளிக்கப்பட்ட மாநிலங்களின் பங்கு குறைந்ததற்கு அதிகரிக்கப்பட்ட மத்திய அரசின் பொறுப்புகள்தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களின் வருவாயை உயர்த்துவதற்கு 42 விழுக்காடு பங்கு போதுமானதாக இல்லை என குஜராத் அரசு நிரூபித்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற அழுத்தம் மத்திய அரசின் கஜானாவுக்கு தரப்படுகிறது என நிதி ஆணையத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு மாநில அரசுகளுக்கு இது தொடர்பான பொறுப்புகளை ஒதுக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை மூலம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காகத்தான், சுரக்ஷா நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்படும் குறிப்பிட்ட நிதி, மாநிலங்களுக்கு இடையே சரிசமமாக பிரிக்கப்படும். இதுகுறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. குடிமக்களின் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாநில வருவாயில் இதனால் பெரும் தாக்கம் உண்டாகும்.

மாநிலங்களின் தேவை குறித்த விவாதம் எழுந்துவரும் நிலையில், மாநிலங்களுக்கு ஏன் பாதுகாப்புத் துறையில் பொறுப்புகளை ஒதுக்கக்கூடாது என்ற கேள்வியை பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் எழுப்பியுள்ளார். களநிலவரம், இதற்கு நேர் எதிராக உள்ளது.

பெறப்படும் வரியில் பெரும்பாலான பங்கை மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால், திட்டங்களை செயல்படுத்தும் கடமை மாநில அரசுகளின் தலையில் விழுகிறது. நிறுவன பங்குகளின் கட்டணத்தை மாநிலங்களுக்கிடையே சரிசமமாக பிரித்து தருவதற்குதான் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அமைக்கப்படும் நிதித்துறை ஆணையம் அரசியலமைப்பு சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது.

மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் பங்கை தாண்டி வரி விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் மத்திய அரசு தனது வருவாயை அதிகரித்துக்கொண்டது. மத்திய அரசின் திட்டங்கள் யாவும் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. நிர்வாகம், நிதி ஆகிய இரண்டின் அடிப்படையிலும் திட்டத்தின் அதிகாரம் பெரும்பாலும் மத்திய அரசுக்கே உள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மோடி ஆட்சியின்போது குறைந்துள்ளது.

ஆனால், மாநில அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் அதிகரித்துள்ளது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி வெகுவாக குறைந்துள்ளதால் மாநில நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. 2020 முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசின் வருவாய் 175 கோடி ரூபாயாக இருக்கும். இன்னும் எவ்வளவு நாள் பொருளாதார மந்த நிலை நீடிக்கும் என்பது தெரியவில்லை. மாநில அரசுகள் நஷ்டத்திலிருக்கும்போது, மத்திய அரசுக்கு தொடர்ந்து வரி செலுத்திவந்தால் நாட்டின் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்துவது கடினமாகும்.

திட்டங்களை செயல்படுத்தி வரையறை செய்யும் பொறுப்புகளை 15ஆவது நிதி ஆணையத்தின் தோள்களில் மத்திய அரசு ஏற்றியுள்ளது. மாநிலங்களின் தேவை, மக்கள் தொகை ஆகியவையின் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா என்பதை நிதி ஆணையம் மேற்பார்வையிட வேண்டும்.

இது போன்ற நிதி சிக்கலில் இருந்து மாநிலங்கள் மீண்டெழுந்து மக்கள் பிரச்னையை முன்னெடுப்பது கடினமாக ஒன்றாக மாறிவிடும்.

இதையும் படிங்க: அயோத்தி வழக்கு: 18 மறு சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details