கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 592 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க மார்ச் 31ஆம் தேதி வரை 30 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கோவிட்-19 பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மார்ச் 31ஆம் தேதிவரை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளையும் மாநில அரசுகள் நிறைவேற்றி வருகின்றன.
தற்போது, மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது, "கரோனா பரவுதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மக்களுக்கு தேவையான உணவு பற்றாக்குறையை தீர்க்கவேண்டியது மத்திய அரசின் கடமை.