தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2020, 5:07 PM IST

ETV Bharat / bharat

நாளை சுற்றுச்சூழல் நிலைக்குழுக் கூட்டம்: காற்று மாசுபாடு குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல்

காற்று மாசுபாடு அதிகரித்துவருவது இந்தியாவில் முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளதால், அது குறித்து விவாதிப்பதற்கு நாளை சுற்றுச்சூழல் நிலைக்குழுக் கூட்டம் கூடவுள்ளது.

air quality levels
நாளை கூடவுள்ள சுற்றுச்சூழல் நிலைக்குழு கூட்டம்; காற்று மாசுபாடு குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல்

டெல்லி: காற்று மாசுபாடு அதிகரித்துவருவது இந்தியாவில் முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளதால், அதுகுறித்து விவாதிப்பதற்கு நாளை காற்று மாசுபாடு நிலைக்குழுக் கூட்டம் கூடவுள்ளது.

இந்தியாவில் காற்றின் மாசுபாடு அதிகரித்துவருவது நாட்டு மக்களின் உடல்நலனை கேள்விக்குள்ளாகும் என்றும் அதுகுறித்து நாளை கூடவுள்ள கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாகவும் அக்குழுவின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் நமது ஈடிவி பாரத்திடம் தெரிவித்தார்.

ஸ்டேட் ஆஃப் குளோபல் ஏர் 2020 என்ற காற்று மாசுபாடு குறித்த அறிக்கையில், உலகிலேயே அதிக பி.எம் 2.5 துகள்களை வெளியேற்றும் நாடாக இந்தியா இருப்பது தெரியவந்துள்ளது. வெளிப்புறத்தில் உள்ள பி.எம் 2.5 துகள்களின் அளவை 2024ஆம் ஆண்டுக்குள் குறைக்கும் வகையில் தூய்மையான காற்றுத் திட்டத்தை கடந்தாண்டு மத்திய அரசு அறிவித்தது.

இத்திட்டம் நகரத்தை மட்டும் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகப் பலரும் கடும் விமர்சனத்தை வைத்தனர். மேலும், இது மாநிலங்கள் அளவிலும் மாவட்ட அளவிலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பி.எம் 2.5 துகள்களின் பாதிப்பால் சீனாவில் 1.42 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகவும், இந்தியாவில் 9,80,000 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. உலகளவில் கடந்த 2019ஆம் ஆண்டு பி.எம் 2.5 துகள்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 58 விழுக்காடாகும்.

வீட்டு காசு மாட்டால் ஏற்படும் பாதிப்புகளை இந்திய அரசு கடுமையாக குறைத்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பல அறிக்கைகள், இந்தியாவில் காற்றின் மாசுபாடு அதிகரிப்பதை குறிப்பிடுகிறது. அதேசமயம் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை 15ஆண்டுகளுக்குள் தீர்க்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத் துறை சார்பில் அவ்வப்போது தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க:குறைந்தபட்ச வெப்பநிலையை பதிவுசெய்த டெல்லி!

ABOUT THE AUTHOR

...view details