தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துபாய் போதைப் பொருள் வியாபாரியுடனான சந்திப்பு - சுஷாந்த் கொலை செய்யப்பட்டாரா ? - மூன்று கான்கள்

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கும் துபாய் போதைப்பொருள் வியாபார தலைவருக்கும் தொடர்புள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

துபாய் போதைப் பொருள் வியாபாரியுடனான சந்திப்பு... சுஷாந்த் கொலை செய்யப்பட்டாரா ?
துபாய் போதைப் பொருள் வியாபாரியுடனான சந்திப்பு... சுஷாந்த் கொலை செய்யப்பட்டாரா ?

By

Published : Aug 24, 2020, 6:22 PM IST

அண்மையில், நடிகர் சுஷாந்த் சிங் தனது அடுக்கு மாடி குடியிருப்பில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலிவுட் சினிமாவில் நிலவும் குடும்ப ஆதிக்கத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக காரணம் கூறப்பட்டுவந்த நிலையில், அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி கூறியது வழக்கின் போக்கையே மாற்றியது.

சுஷாந்த மரணம் குறித்து கடந்த இரண்டு வாரங்களாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி கருத்து வெளியிட்டுவருகிறார்.

இந்நிலையில் இன்று அவர், "எய்ம்ஸ் மருத்துவர்களால் சுனந்தா புஷ்கருக்கு நடத்தப்பட்ட உடற்கூறாய்வு சோதனையின்போது அவரது வயிற்றில் மர்மமான ஒரு விடயம் காணப்பட்டது உண்மையே. இத்தகைய சோதனை ஸ்ரீதேவி அல்லது சுஷாந்திற்கு ஏன் செய்யப்படவில்லை ?.

சுஷாந்த் கொல்லப்பட்ட அதே நாளில் துபாய் போதைப்பொருள் வியாபாரி ஆயாஷ் கான் அவரை சந்தித்தது ஏன்?.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் உண்மையை வெளிக்கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் தூதரக அலுவலர்களுடன் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இந்த வழக்கு குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதால் அந்த துபாய் தாதா ஆழ்ந்த சிக்கலில் உள்ளதாக உணர்கிறார். அதே மன நிலையிலேயே மூன்று கான்களும் உள்ளனர்.

சுஷாந்த், ஸ்ரீதேவி மற்றும் சுனந்தா கொலை வழக்குகள் குறித்த உண்மைத் தகவல்களை அறிய வேண்டுமானால் சிபிஐ அலுவலகம், மொசாட் மற்றும் ஷின் பெத்தின் உதவியை நாட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

சுஷாந்த் சிங்கின் மரணத்தில் அவரது காதலியான ரியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நேரத்தில், சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள இப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ABOUT THE AUTHOR

...view details