தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 25, 2020, 12:19 PM IST

ETV Bharat / bharat

கோவிட்-19: இளைஞர்களை பயிற்றுவிக்கும் சர்வதேச அமைப்புகள்

ஸ்மித்சோனியன் அறிவியல் கல்வி மையம், உலக சுகாதார அமைப்புடன் இணைந்து இளைஞர்களுக்கு கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்வதற்கு பயிற்சியளிக்க திட்டமிட்டுள்ளது.

Coivd
Coivd

ஸ்மித்சோனியன் அறிவியல் கல்வி மையம் (எஸ்.எஸ்.இ.சி) எனப்படும் அமைப்பு, 8-17 வயது இளைஞர்களுக்கு கோவிட்-19 குறித்து அறிவியல் மற்றும் சமூக அறிவியலை புரிந்துகொள்ள ஒரு புதிய வழிகாட்டியை உருவாக்கியுள்ளது.

ஸ்மித்சோனியன், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இன்டர் அகாடமி பார்ட்னர்ஷிப் (IAP) உடன் இணைந்து ‘கோவிட் - 19'இல் இருந்து நம்மையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாக்க முடியும்? என்ற தலைப்பில் இந்த வழிகாட்டியை உருவாக்கியுள்ளது.

ஸ்மித்சோனியன் அறிவியல் கல்வி மையத்தின் இயக்குநர் கரோல் ஓ’டோனெல் இதுகுறித்து, WHO, IAP, ஸ்மித்சோனியனிலுள்ள மூத்த திட்ட ஆலோசகர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த நடவடிக்கையை துல்லியமாக செயல்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளோம். இதற்கு உதவிய பல்வேறு நிபுணர்கள், அலுவர்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

ஐநாவின் நிலையான முன்னேற்ற இலக்குகளை அடிப்படையாகக் கொண்ட இந்த வழிகாட்டி, இளைஞர்கள் மூலம் குடும்ப, சமூக பாதுகாப்பை உறுதிசெய்வதை இலக்காக வைத்துள்ளது.

கீழ்கண்ட கேள்விகளை இளைஞர்களிடம் அமைப்பு முன்வைக்கிறது

  • உலகளவில் கோவிட-19இன் தாக்கம் என்ன?
  • கைகளை எவ்வாறு சுத்தகமாக வைத்திருப்பது?
  • தகுந்த இடைவெளியை எவ்வாறு பராமரிப்பது?
  • சுவாச சுகாதாரத்தை எவ்வாறு பராமரிப்பது?
  • கோவிட் - 19 பற்றிய கூடுதல் தகவல்களை எவ்வாறு தெரிந்துகொள்வது?
  • அறிவியல் சார்ந்த தகவலைப் பெற இப்போது என்ன நடவடிக்கைகள் எடுக்க முடியும்?
  • ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை இந்தச் சூழலில் மக்களுக்கு எவ்வாறு கொண்டு சேர்க்கலாம்?

ஸ்மித்சோனியன் அறிவியல் கல்வி மையம் இந்த திட்டத்தின் மூலம் உலகெங்கும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களை அறிவியல் செயல்பாட்டில் ஈடுபடவைக்கிறது. மேலும், இதன் மூலம் அவர்கள் கற்றல் திறனை ஊக்குவிக்கிறது" என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நேர்காணலுக்கு மத்தியில் நிலநடுக்கம்: பிரதமர் நிகழ்ச்சியில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details