ஆந்திரா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ சைலம் சிவன் கோயில் உள்ளது. அங்கு கடந்த மார்ச் 24ஆம் தேதி இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டறிப்பட்டது.
இந்நிலையில் மோசடி குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், அக்கோயிலில் பணியாற்றிவந்த மூன்று நிரந்தர ஊழியர்கள், 23 அவுட்சோர்சிங் ஊழியர்கள்மோசடியில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டு அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கோயிலுக்கு வரும் நிதி கோயிலின் வங்கி கணக்கிற்கு கொண்டு சேர்க்கப்படும். அந்த பணத்தை இவர்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் 2016 - 2019 காலகட்டத்தில் கோயிலுக்கு பக்தர்கள் செலுத்தும் கட்டணத் தொகை, தரிசனத் தொகையினை எடுத்ததாகத் தெரியவந்துள்ளது.
மத்திய அரசு அறிவித்த அன்லாக் - 1 தளர்வுகளின்படி வரும் ஜூன் 8ஆம் தேதி ஸ்ரீ சைலம் கோயில் பக்தர்களின் வழிபாட்டிற்காகத் திறக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க:கோயில்களை திறக்க தேங்காய் உடைத்த இந்து ஆலய பாதுகாப்புக் குழு!