தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பத்திரிகையாளர் இறக்க காரணமான ஐஏஎஸ் அலுவலர் சஸ்பெண்ட்! - sri ram venkatraman

கேரளா: சாலைவிபத்தில் பத்திரிகையாளர் இறக்க காரணமான ஐஏஎஸ் அலுவலரை தலைமை செயலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ias sriram venkatraman

By

Published : Aug 6, 2019, 1:00 AM IST

கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் வெளியாகும் தினசரி மலையாள பத்திரிகையின் முதன்மை நிரூபராக பணியாற்றி வந்தவர் முகமது பஷீர். இவர் அப்பகுதியில் உள்ள மியூசியம் சாலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று மோதியதில் இருசக்கர வாகனத்துடன்தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பஷீரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விபத்திற்கு காரணமான ஸ்ரீராம் வெங்கட்ராமனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் தான் காரை ஓட்டவில்லை என்றும், தன்னுடன் இருந்த பெண் நண்பர் தான் காரை ஓட்டியதாக தெரிவித்தார். ஆனால், நேரில் பார்த்த பொதுமக்கள் காரைஸ்ரீராம் வெங்கட்ராமன் தான் ஓட்டி வந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ள நிலையில், பத்திரிகையாளர் சாவிற்கு காரணமான ஸ்ரீராம் வெங்கட்ராமனை தலைமை செயல் டாம் ஜோஸ் பணியிடைநீக்கம் செய்துஉத்தரவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் முகமது பஷீரின் மறைவுக்கு அம்மாநில முதலமைச்சர் பிரனாயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details