தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இலங்கையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்பு.!

கொழும்பு: இலங்கையில் இடைக்கால அமைச்சரவையை அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச நியமித்தார்.

srilanka president appoints 16 member interim cabinet

By

Published : Nov 22, 2019, 5:18 PM IST

இலங்கை அதிபர் தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.
இதையடுத்து மகிந்த ராஜபக்ச அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவர் வசம், நிதி, பொருளாதார விவகாரங்கள், வீடு மற்றும் நகர்புற வசதி மற்றும் புத்தவிவகாரங்கள் துறை ஆகியவை உள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் இடைக்கால அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொண்டது. இந்த அமைச்சரவையில் கோத்தபயவின் மற்றொரு சகோதரரான சமல் ராஜபக்ச, விவசாயம், நீர்பாசனம், உள்நாட்டு வணிகம், வாடிக்கையாளர் நலவாரியம் உள்ளிட்ட துறைகளை கவனிக்கிறார்.
இவர்கள் தவிர அமைச்சரவையில் நிர்மல் ஸ்ரீபாலா, ஆறுமுகம் தொண்டைமான், டக்ளஸ் தேவானந்தா, பவித்ரா தேவி வன்னியராச்சி, பந்துலா குணவர்த்தனே, ஜனக பந்ரா தென்னக்கூன், டள்ளஸ் அழகப்பெருமா, விமல் வீரவன்சா, மகிந்தா அமரவீரா, எஸ்.எம். சந்திரசேனா, ரமேஷ் பதிரனா மற்றும் பிரசன்னா ரணதுங்க ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர்.

மகிந்த ராஜபக்ச, 2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை இலங்கையின் அதிபராக இருந்தார். அப்போது தமிழ் விடுதலைப் புலிகள் மீது போர் தொடுத்தார்.
இதில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அவர் சர்வதேச விசாரணையை எதிர்கொண்டார். இந்த நிலையில் மீண்டும் அவரின் மறைமுக தலைமையிலான அமைச்சரவை இலங்கையில் பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முத்தையா முரளிதரனுக்கு கவர்னர் பதவி?

ABOUT THE AUTHOR

...view details