தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவின் அக்கறையால் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் - சேனாதிபதி ராஜா எம்.பி. - சேனாதிபதி ராஜா

புதுச்சேரி: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இலங்கைத் தமிழர்கள் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலைகள் தென்படுவதாக இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிபதி ராஜா கூறியுள்ளார்.

mp
mp

By

Published : Feb 6, 2020, 7:28 PM IST

புதுச்சேரி பல்கலைக்கழகம் மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இணைந்து பதினான்காவது உலகத் தமிழ் பண்பாட்டு மாநாடு இன்று புதுச்சேரி பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கனடா, இலங்கை உள்ளிட்ட ஒன்பது நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்ததுடன், மாநாட்டு மலரையும் வெளியிட்டார். நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிபதி ராஜா, புதுவை சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சேனாதிபதி ராஜா, “இலங்கையில் இன விடுதலைக்காக லட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுத்தும், விடுதலை கிடைக்காத நிலையில், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழர்கள் மீண்டும் ஜனநாயக ரீதியான போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலைகள் தென்படுகிறது.

சர்வதேச ரீதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், குறிப்பாக இந்திய நாட்டின் அக்கறையும், இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை கொடுப்பதற்குரிய ஒரு சூழ்நிலையை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவின் அக்கறையால் ஈழத்தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும்

போர் காலத்திலும், அதற்கு முன்னரும், ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் இன்னும் தமிழர்களிடம் விடுவிக்கப்படாமல் இருக்கிறது. மக்கள் மீள்குடியேற்றப்பட அனுமதிக்கப்படாமல் இருக்கின்றது. தேசிய கீதத்தை தமிழில் பாட வேண்டாம் என்று ஜனாதிபதி அறிவித்திருக்கிறார். அதையொட்டி புதிய கிளர்ச்சி உண்டாகியிருக்கிறது. தமிழர்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர்“ என்று சேனாதிபதி ராஜா தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பாலியல் வழக்குகள் பெருகுது! மார்க்சிஸ்ட் கம்யூ., குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details