பள்ளி மாணவர்கள் படிக்கும் பாடத்தில் விளையாட்டு குறித்த பாடங்கள் இதுவரை பெருமளவில் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய கல்வி கொள்கையின் பாடத் திட்டத்தில் விளையாட்டு சார்ந்த பாடங்கள் இடம்பெறும் என்றும் அதுகுறித்து ஆலோசனை செய்ய உயர்மட்டக் குழு ஒன்றை தேசிய விளையாட்டு கல்வி வாரியத்தில் அமைத்துள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையில் விளையாட்டு பாடம் நிச்சயம் இருக்கும் - அமைச்சர் கிரண் ரிஜிஜு - sports in education
டெல்லி: மத்திய அரசின் புதிய கல்லி கொள்கையில் விளையாட்டு சார்ந்த பாடங்களும் முக்கிய அம்சமாக இடம்பெறும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கிரண் ரிஜிஜு
மேலும், மாணவர்களுக்கு கல்வியும் விளையாட்டும் சமமாக அளிக்கப்பட வேண்டும். அதனால் விளையாட்டு, பாடம் சாரா கல்வியாக இருக்கக்கூடாது. அமைக்கப்பட்ட அந்த உயர்மட்டக் குழு மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:கரோனாவுக்கு பின் மீண்டும் தொடங்கும் டென்னிஸ்: ஜோகோவிச் பங்கேற்பு