புதுச்சேரியில் சுகாதாரத் துறை சார்பில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். உப்பளத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
முகக்கவசம் அணிந்து விளையாடுங்க தம்பி - மல்லாடி கிருஷ்ணாராவ் - சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்
புதுச்சேரி: இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முகக்கவசம் அணிந்து பயிற்சியை மேற்கொள்ளுமாறு வீரர்களுக்கு அறிவுறுத்தினார்.
malladi krishna rao
அப்போது, விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடும்போது முகக்கவசம் அணிந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:மருத்துவக் குணம் மிகுந்த ஜாதிக்காய் ஊறுகாய்: களைகட்டும் விற்பனை